மனப்பூர்வமாய் சிநேகிப்பவரே

Artists : Bro.Sam Jebadurai
Album:
Categories: Jesus


மனப்பூர்வமாய் சிநேகிப்பவரே                               

நேசத்தில் உன்னதரே                                      

நானும் உம்மை நேசிப்பேன்                                

மார்பினில் மகிழ்ந்திடுவேன்

 

சிநேகிதரே, ஆத்ம சிநேகிதரே                                    

உத்தமரே, என்றும் உன்னதரே                                   

ஆருயிரே, அன்பின் ஆருயிரே                                    

ஆனந்தமே,  பரமானந்தமே

 

யாக்கோபை சிநேகித்தீரே                                   

இஸ்ரவேலாய் மாற்றினீரே                                 

அநாதி சிநேகத்தால் என்னையும் சிநேகித்து                  

மகிமையின் பாண்டமாய் வனைந்திட்டீரே

 

எலியாவை தெரிந்து கொண்டீர்                              

அக்கினியால் நிரப்பிட்டீரே                                  

நேச வைராக்கிய அக்கினி ரதமாய்                          

என்னையும் சுமந்து செல்வீர்

 

யோவானை முன்குறித்தீர்                                  

பரலோகத்தின் காட்சி தந்தீர்                                

அன்பினால் நிறைந்த சீஷனைப் போல                      

மகிமையில் தரிசிப்பேனே!