நல்லவர் நல்லவர்

Artists :
Album:
Categories:


நல்லவர் நல்லவர் நல்லவர் நல்லவர் இயேசு நல்லவர்         

நாங்கள் இங்கே பாடும் எங்கள் இயேசு நல்லவர்           

உண்மை தெய்வம் இவர் உலகை இரட்சித்தவர்       

நன்மை செய்தே இவர் நாடெங்கும் சுற்றியவர்        

நானிலத்தோருக்கு நன்மைகள் செய்த நல்லவர்                                             - இயேசு நல்லவர் (9)

    

அன்பாய் பிறரை நேசிப்பவருக்கு இயேசு நல்லவர்         

ஆதரவில்லா அனாதைகட்கு இயேசு நல்லவர்        

திக்கற்றோர்க்கும் விதவைகட்கும் இயேசு நல்லவர்              

தீய வழிகளிலிருந்து திரும்பியவர்க்கு இயேசு நல்லவர்

                                - இயேசு நல்லவர்

    

குருடர்களுக்கு பார்வை கொடுத்த இயேசு நல்லவர்

குஷ்டரோகிகளையும் சொஸ்தமாக்கிடும் இயேசு நல்லவர்

முடவர்களையும் நடந்திடச் செய்த இயேசு நல்லவர்       

முட்களின் நடுவில் லீலியின் ரோஜா இயேசு நல்லவர்

                                - இயேசு நல்லவர்

    

பாவத்தைப் போக்கி பயமதை நீக்கிய இயேசு நல்லவர்     

பரலோக சந்தோஷம் பக்தருக்களித்த இயேசு நல்லவர்          

பரிமள தைலமாய் வாசனை தந்த என் இயேசு நல்லவர்    

பாரினில் இவர் போல் தெய்வமும் இல்லை இயேசு நல்லவர்                                     - இயேசு நல்லவர்

 

இருளில் வாழும் ஜனங்களை மீட்ட இயேசு நல்லவர் 

ஈனலோகத்திற்காக சிலுவை சுமந்த இயேசு நல்லவர்      

மன்னுயிர் காக்க தன்னுயிர் தந்த இயேசு நல்லவர்         

மூன்றாம் நாளில் மரித்துயிர்தெழுந்த இயேசு  நல்லவர்                                          - இயேசு நல்லவர்