நன்றியால் பாடிடுவோம்

Artists :
Album: Praise Songs
Categories: Jesus


நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா நன்மைகளை நினைத்தே
 
செங்கடல்தனை நடுவாய் பிரித்த எங்கள் தேவனின் கரமே
தாங்கியதே இந்நாள் வரையும் தயவாய் மாதயவாய் - நன்றி
 
மரணத்தை நீக்கியே ஜீவனை அருளிய மாபெரும் கிருபை
மாநிலத்தோர்க் கீந்தார் இயேசு சுவிசேஷ ஒளியாய் - நன்றி

உயிh;ப்பித்து உயர்த்தினார் உன்னதம் வரை - உடன் சுதந்தரராய் இருக்க
கிருபையின் ஈவாய் வரும் காலங்கள் விளங்க ஒளி விளங்க - நன்றி
 
சீயோனைப் பணிந்துமே கிறிஸ்தேசு ராஜனாய் - சீக்கிரம் வருவார்
சிந்தை வைப்போம் சந்திக்கவே இயேசுவின் முகமே - நன்றி