நேசரே நேச உச்சிதமே

Artists :
Album:
Categories:


நேசரே நேச உச்சிதமே                                   

விரைந்து வாருமே எங்குதென் உள்ளமே - 2

    

வருகையின் அடையாளங்கள் ஏராளமே                   

காலத்தின் தோற்றங்கள் தெளிவானதே - 2                

காத்திருக்க நேரமில்லை கர்த்தரே                         

வாருமே நீர் விரைவாகவே - 2 - நேசரே நேச

 

மேகத்தின் மீதினில் இயேசு ராஜனும்                           

ஆயிரம் ஆயிரமாம் தூதருடன் - 2                         

காத்திருக்கும் பரிசுத்த கூட்டமும்                          

வானிலே நாம் ஆடிப்பாடுவோம் - 2 - நேசரே நேச

 

நேசரின் சாயலை கண்டு கழித்து                          

அன்பரின் மார்பிலே சாய்ந்திருப்பேன் - 2                        

கவலை துன்பம் ஒன்றுமில்லை என்றுமே                 

விண்ணில் நானும் வாழ்ந்து சுகிப்பேன் - 2 - நேசரே நேச.