நேசரே தீவிரியும்

Artists :
Album:
Categories: Jesus


நேசரே தீவிரியும் நேரமாச்சுதே                                 

கண் குளிர உம்மை காண                                

உள்ளம் ஏங்கிடுதே

 

வாரும் வாரும் விரைவாக                                

வான சேனையுடனே

 

மேகமீதில் ஏறிச்சென்ற மகிமை இரட்சகா                       

சென்ற பணி மீண்டும் வாரும் கிருபை நாயகா

    

தூதருடன் எக்காளம் வானமீதில் முழங்கிடவே                  

ராஜா ராஜ சிங்கமாக வருவீர் இயேசையா

 

முட்கிரீடம் தரித்திடுவேன் பொன் இயேசு சிரசினிலே      

காயங்கள் ஒவ்வொன்றுக்கும் முத்தங்கள் ஈந்திடுவேன்

 

நேசரின் மார்பினிலே எப்போதும் செய்ந்திருப்பேன்              

கோடி கோடி ஆண்டுகளாய் நேசர் அன்பை ருசித்திடுவேன்.