நீல வானுக்கப்பால்

Artists :
Album:
Categories:


நீல வானுக்கப்பால் நித்திய தேசமுண்டு                        

என்னை நேசிக்கும் நல் கர்த்தர் அங்குண்டு - 2

    

கண்ணீரில்லாத தேசமது                            

கவலையில்லாத தேசமது - 2                             

ஒளிமயமே நேசர் முகமே                                

ஆனந்தமே பரமானந்தமே - 2                         - நீல

 

தேவாட்டுக்குட்டியின் இரத்தத்தினால்                      

அங்கியை தோய்த்து வெளுத்தவர்கள் - 2                  

சதாகாலமும் இயேசுவுடனே                              

ஆடிப்பாடியே அரசாளுவார் - 2                        - நீல

    

பக்தர்கள் கோடி தூதருடன்                                

கைகோர்த்து மகிழ்ந்து போற்றிடுவேன் - 2                      

துதி தேசமே எந்தன் வாஞ்சையே                    

கிறிஸ்து இயேசுவே எந்தன் மேன்மையே - 2          - நீல