நீர் தானையா நல்ல மேய்ப்பன்
உம்மைத்தான் பின் தொடர்வேன்
எனக்கு நீர் தானையா நல்ல மேய்ப்பன்
உம்மைத்தான் பின் தொடர்வேன்
இரட்சண்ய நாளினிலே என்னை
இரட்சித்த தெய்வம் நீரே... - 2
தேனிலும் இனிய வார்த்தைகளாலே
தேற்றி என்றும் அணைப்பவரே - எனக்கு (நீர் தானையா...)
வாசலின் வழியாய் வந்தவரே - என்னை
பெயா; சொல்லி அழைத்தவரே... - 2
மந்தைகட்காக உம் ஜீவனைத்தந்து
ஜீவனைப் பெற்றவர் நீரே - எனக்கு (நீர்தானையா...)
போற்றுவார் போற்றட்டும்
தூற்றுவார் தூற்றட்டும்
புகழ்பாடா தயங்கிடேனே... - 2
நித்தமும் உம்மை துதித்திடுவேன்
நின்மதி என்றும் நின்மதியே... - 2 எனக்கு (நீர் தானையா...)