ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே

Artists : Bro.Sam Jebadurai
Album: Praise Songs
Categories: Jesus


ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே - Oru Vaarthai Sollum Karthaavae
 
ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே
உம் வார்த்தையிலே  சுகம்
உம் வார்த்தையிலே மதுரம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்
 
1. மாராவின் தண்ணீரெல்லாம்
மதுரமாக மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே               - நீர்
 
2. இருளான வாழ்க்கை எல்லாம்
ஒளியாக மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே               - நீர்
 
3. எரிகோவின் தடைகள் எல்லாம்
துதிகளாலே மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே               - நீர்
 
4. வியாதிகள் வறுமையெல்லாம்
விசுவாசத்தால் மாறிப்போகும்
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதுமே               - நீர்