பகலின் குளிர்ச்சி வேளை - எந்தன்
இயேசு உலாவும் வேளை
அன்பு நேசருடன் இன்பமாய் கைகோர்த்து
உன்னத நேசத்தால் நிறைந்து உலாவிடுவேன்
ஏனோக்குடன் நடந்து மகிழ்ந்தவர்
என்னுடன் இணைந்து நடக்கிறார்
உள்ளமெல்லாம் மகிமை
வாழ்க்கையெல்லாம் மிக இனிமை
எம்மாவூருக்குப் போன சீஷருடன்
நண்பராய் நடந்து சென்றவர்
எந்தன் கரம் பிடித்தே
என்றென்றும் வழி நடத்திடுவார்
உலகத்தின் முடிவு பரியந்தம்
உன்னுடன் இருப்பேன் என்றவர்
வாக்குத்தத்தம் செய்தாரே
வாக்கு மாறிடா எந்தன் இயேசு.