பரிசுத்த பூமி, மகிமையின் பூமி

Artists :
Album:
Categories:


பரிசுத்த பூமி, மகிமையின் பூமி                            

பரிசுத்தர் இயேசு வாழ்ந்திட்ட பூமி                              

பரிசுத்தர் என்னில் வாழ்வதாலே                          

நான் நிற்கும் இடமே, பரிசுத்த பூமி                              

பரிசுத்தர் என் தேவன் பரிசுத்தர் ..... (4)

 

ஆவி ஆத்துமா சரீரத்தையும்                                   

கறை திரையின்றி காத்திடுவேன்                          

மகிமையின் ஆவியால் நிறைந்துமே, நான்                 

மகிமையின் மேல் மகிமை அடைந்திடுவேன்!

 

பரலோக பொக்கிஷம் என்னிலுண்டு                            

மகிமையின் நம்பிக்கை என்னிலுண்டு                     

உலகத்தின் பயணத்தை முடித்ததுமே நான்                

பரிசுத்த மகிமையில் சேர்ந்திடுவேன்!

 

இரட்சகர் கிருபை மாபெரிதே                                   

அன்பும் இரக்கமும் அளவில்லையே                 

பரிசுத்த வேதத்தின் மகத்துவமே                           

பரலோக பாதையில் வழிநடத்தும்!