பிதாவுக்கு ஸ்தோத்திரம் தேவ குமாரனுக்கு ஸ்தோத்திரம்
ஆவியானவர்க்கு ஸ்தோத்திரம் என்றும் என்றுமே
பாவ பாரத்தினின்று என்னை மீட்டிட்டார்
சாப வல்லமையினின்று என்னை காத்திட்டார்
சேனைகளின் தேவன் என் சொந்தமானாரே
சேனை சேனை தூதர்களை தந்துவிட்டாரே
சீக்கிரமாய் வரப்போகும் ஆத்ம நேசரே
சீக்கிரமாய் காண்பேனே பொன் முகத்தையே