பொன் முகத்தின் இனிய நேசரே
உம்மை கண்குளிர கண்டு மகிழ்வேன்
அன்பின் ஆழம் நீளமும் அகலமில்லையே
உந்தன் நேசம் குறைவதில்லையே
அல்லேலூயா (2) ஆமென் அல்லேலூயா - 4
இஸ்ரவேலின் ஜெய கெம்பீரமே
சேனை அதிபராக முன் நடந்தீரே
வெற்றி ஜெய வேந்தனே ஜீவதேவனே
எங்களுக்கு தோல்வி இல்லையே
மரணம் சாவு கூர் ஒடித்தீரே
எல்லா பயத்தினின்றும் பாதுகாத்தீரே
கன்மலையும் கோட்டையும் துணையுமானீரே
வெற்றி மேலே வெற்றி தந்தீரே
பொற்தளத்தின் முத்து வீதிகள்
ஐயா நத்தனீகள் ஜீவ ஆறுகள்
ஜீவ கிரீடம் சூடியே ஜீவ தேவனை
ஆடிப்பாடி ஸ்தோத்திரிப்பேனே