புது பாடலால் புண்ணியரை
போற்றிடுவேன் புகழ்ந்திடுவேன்
நரம்பு வீணை மீட்டி நீட்டி
நடனமாடி மகிழ்ந்திடுவேன்
அற்புதமே அவர் நாமம்
அதிசயமே அவர் நாதம்
அல்லேலூயா அவர் கீதம்
தாயின் மேலாய் நேசித்தாரே
தந்தையை போல் போஷித்தாரே
தேவ அன்பால் நிறைந்து நானும்
தேவாதி தேவனை துதித்திடுவேன் - அற்புதமே
நெரிந்த நாணல் முறிந்திடாமல்
மங்கிய திரியை அணைத்திடாமல்
எண்ணெய் ஊற்றி என்னை மாற்றி
புதிதான அபிஷேகம் தந்திட்டாரே - அற்புதமே