நீர் செய்த நன்மைகள் ஒவ்வொன்றாய் எண்ணி  

Artists :
Album: Praise Songs
Categories:


நீர் செய்த நன்மைகள் ஒவ்வொன்றாய் எண்ணி                                

நித்தமும் உம்மை நான் துதிக்கின்றேன்                                         

ஐயா ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் - 2

            1.     பாவ சேற்றினில் கிடந்தேனே மீட்கவே தேடி வந்தீரே - 2                       

கழுவி எடுத்தீரே அன்பு கூர்ந்தீரே - 2                                            

பிள்ளை ஆக்கினீரே (உந்தன்) - ஐயா

            2.     தாங்கா துயரங்கள் பெருகியதே தயங்காமல் ஓடி வந்தீரே                           

இன்னல் நீக்கினீரே இன்பம் நல்கினீரே                                    

இரக்கம் செய்தீரே (எனக்கு) - ஐயா

            3.  வியாதியின் கொடுமையோ தாக்கியதே வல்லவர் சுகமே தந்தீரே                      

வறுமை வாட்டியதே ஆசீர்வதித்தீரே                                            

உயர்த்தி மகிழ்ந்தீரே - என்னை - ஐயா

            4.     தந்தையும் தாயும் கைவிட்டாலும் தாங்கியே அரவணைத்தீர்                   

உள்ளங்கைகளிலே அன்பாய் வரைந்தீரே                                       

தூக்கி சுமந்தீரே (என்னை) - ஐயா