தாயும் தந்தையும் கைவிட்டாலும்

Artists :
Album:
Categories:


தாயும் தந்தையும் கைவிட்டாலும்                         

கைவிடார் என் இயேசுவே                                

திகையாதே கலங்காதே                                   

கருணை நாதர் காப்பாரே

 

தாயின் கர்ப்பப் பையினின்று                                   

நேசம் வைத்தார் எந்தன் மீது                                   

தூரம் போயினும் சேர்த்தாரே                                   

தூய அன்பினை துதிப்பேனே

 

மாறும் இனத்தார் மத்தியிலே                                   

மாறா அன்பினை பொழிந்தாரே                      

சிங்கம் மத்தியில் நின்றிடினும்                                 

ராஜ சிங்கமாய் காத்தாரே

 

ஆத்ம சிநேகம் வைத்தாரே                                

ஆத்துமாவை காப்பாரே                                   

சீயோன் சேர்த்திட வருவாரே                                   

நித்திய காலமய் துதிப்பேனே.