தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
இயேசு என் தேவன்
இயேசு இயேசு இயேசு
இயேசு என் தேவன்
உன்னதத்தில் வாசம் செய்யும் உத்தமரே
நீர் என் உள்ளத்தில் இருப்பதல் ஸ்தோத்திரம்
வானாதி வானங்களின் சிருஷ்டிகரே
உந்தன் வார்த்தையினால் தேற்றுவதால் ஸ்தோத்திரம்
யோர்தானின் பெருவெள்ள நேரத்திலே
என்னை காத்திட்ட அன்புக்காய் ஸ்தோத்திரம்
எரிகோவின் மதில்களை தகர்த்திட்டீரே
என்றும் என்னோடு இருப்பதற்காய் ஸ்தோத்திரம்
சீக்கிரமாய் வரப்போகும் ஆத்ம நேசரே
உம்மை வருகையில் காண்பேனே ஸ்தோத்திரம்
என்றென்றும் உம்மோடு வாழ்வதற்கு
நித்திய ஜீவனை தந்ததால் ஸ்தோத்திரம்