துதியே துதியே துதியே துதியே
துதியுமக்கே துதியே (2)
தூத கணங்கள் தூயவர் உம்மை
பாத சேவை செய்து பணிந்தும்மைத் துதிக்கும்
வேத முதல்வனும் நீர் - துதி
அண்டசராசரம் அனைத்துமே ஒன்றாய்
விண்டலாதிபா வியந்தும்மைத் துதிக்கும்
பரிசுத்த தேவனும் நீர் - துதி
பரிசுத்தர் யாவரும் பரமனே உம்மைத்
தரிசிக்க நாடி தாழ்ந்தும்மைத் துதிக்கும்
பரிசுத்த தேவனும் நீர் - துதி
அந்தகாரத்தின் அடிமைகளுக்கு
சுதந்தர ஒளியை சுடரிடச் செய்ய
வந்த குமாரனும் நீர் - துதி
மீட்கப்பட்டவர்கள் ஆனந்தங் கொண்டு
பாட்டுகள் பாடி மகிழ்ந்தும்மைத் துதிக்கும்
ஆட் கொண்ட நாதனும் நீர் - துதி
கர்த்தாதி கர்த்தனே இராஜாதி இராஜனே
நித்தியமான எம் தேவாதி தேவே
துத்தியம் செய்திடுவோம் - துதி