தூய்மை ஒளி என்னில் வீசச் செய்திடும்
தூய ஆவியே வல்ல ஜீவ ஆவியே
இப்போ வாரும் தாரும் அருள்மாரியை
ஊற்றும் ஊற்றும் பின்மாரியை
வானம் திறந்து ஐயா வல்ல ஆவியை
தானமாகவே இன்று தந்திடுமே - இப்போ
தினந்தோறுமே தேவ அக்கினியை
அனுப்பிடுமே என்னை அனல்மூட்டுமே - இப்போ
தேவ சாயலில் தேவ மகிமையோடு
மனுஷரிடம் மறுரூபமாகவே - இப்போ