உள்ளம் உருக்கும் நேசம்

Artists :
Album:
Categories:


உள்ளம் உருக்கும் நேசம் கல்வாரி நேசமே                      

செந்நீர் கலந்து பாயும் குருதி எனக்காகவே

 

அளவற்ற அந்த அன்பு                                    

அளவற்ற அந்த நேசம்                                    

அளவற்ற கிருபையே

    

கள்ளம் இல்லாத தூய்மை என்னுள்ளம் நிறைக்கின்றதே         

கள்ளன் கெஞ்சிட்டபோது கருணை விளங்கிட்டதே

 

மேன்மை எல்லாம் துறந்தார் அடிமை ரூபமானார்          

விண்ணகம் என்னை உயர்த்த மண்ணகம் மடிந்திட்டாரே

 

சவுக்கால் அடிக்கப்பட்டார் முள்முடி சுமந்திட்டாரே              

ஆணி துளைத்ததையோ எனக்காக எனக்காகவே