உள்ளத்தின் ஆழம் பொங்குதே
உத்தமரே உம் அன்பினால்
பாத்திரம் நிரம்பி வழியுதே
உன்னதத்தின் ஆவியினால்
துதிப்பேன் களிப்பேன் மகிழ்வேன்
மன்னவன் மார்பினிலே
நேசத்தின் உச்சிதம் நேசரே
கறையில்லையே உம் அன்பிற்கே
கல்வாரி தரிசனம் தந்தீரே
கருணையாய் தேற்றினீரே
ஆனந்த கண்ணீர் நதியாக
ஊற்றிடுவேன் உந்தன் பாதத்தில்
பொன் முகம் நோக்கி பார்த்துமே
பூரிப்பய் வாழ்ந்திடுவேன்
இரசத்தினால் பீறிடும் துருத்திபோல்
அன்பென்னை நெருக்கி ஏவுதே
ஊழியம் செய்ய தியாகமாய்
தந்தேன் உம் சேவை செய்ய
பாடல்-95
வாக்களித்தீர் வாக்கின்படியே
வாக்களித்தீர் வாக்கின்படியே வாரும் ஆண்டவரே
பிதாவின் வாக்கு உன்னத பெலனை தாரும் ஆண்டவரே
எல்லோர் மேலும் வல்லமை ஊற்றும்
எல்லோர் மேலும் வந்திரங்கும்- 2
அல்லேலூயா வாரும் தேவா
அல்லேலூயா அழைக்கின்றோம் - 2
மேல்வீட்டறையில் சீஷர்கள்மீது பொழிந்த அருள்மழையே
எங்கள் மீதும் பின்மாரி மழையை பொழியும் ஆண்டவரே - எல்லோர் மேலும்
மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபமாகட்டுமே
பெலத்தின் மேலே பெலனடைய நிரப்பும் ஆண்டவரே - எல்லோர் மேலும்
விண்ணப்ப ஆவி மன்றாட்டு ஆவி வேண்டும் ஆண்டவரே
கண்ணீர் நதியாய் கண்களும் மாற ஜெபத்தினை தந்திடுமே - எல்லோர் மேலும்