உம் நாமம் சொல்ல சொல்ல
என் உள்ளம் மகிழுதையா
என் வாழ்வில் மெல்ல மெல்ல
உம் இன்பம் பெருகுதையா
மாணிக்கத் தேரோடு காணிக்கை தந்தாலும்
உமக்கது இணையாகுமோ?
இந்த உலகமே வந்தாலும் உறவுகள் நின்றாலும்
உமக்கது ஈடாகுமோ... ஆ...ஆ... - உம்
பாலென்பேன் தேனென்பேன்,
தெவிட்டாத அமுதென்பேன்
உம் நாமம் என்ன என்பேன்
மறை என்பேன் நிறை என்பேன்
நீங்காத நினைவென்பேன்
உம் நாமம் என்ன என்பேன்