உம்மை நான் துதிக்கிறேன்
உள்ளத்தால் போற்றுகின்றேன்
என்னை மீட்ட இரட்சகரே
என்றென்றும் வாழ்த்திடுவேன்... - 2
ஆராதனை... ஆராதனை... - 2
என் அன்பர் இயேசுவிற்கே... - 2 (உம்மைநான்...)
சத்தியத்தை கொடுத்த என் தெய்வமே
சத்துருவை வெல்வேன் உம்பலத்தால்... - 2
சாபங்கள் தீர்த்தீர் என்னை விட்டு
உம் சாயலாய் என்னை மாற்றிடவே... - 2
ஆராதனை... - 2 ஆராதனை... - 2
என் அன்பர் இயேசுவிற்கே... - 2 (உம்மைநான்...)
பாவங்கள் கழுவி அனைத்தீரையா
துக்கங்கள் நீரே சுமந்தீரையா... - 2
என்னுள்ளம் எப்போதும் உம்மை போற்றும்
என் தெய்வமே உம்நிழல் போதும்... - 2
ஆராதனை... - 2 ஆராதனை... - 2
என் அன்பர் இயேசுவிற்கே... - 2 (உம்மைநான்...)
பொன்னையும் பொருளையும் வெறுத்தேனையா
மண்ணின் பெருமையை மறந்தேனையா... - 2
வான் மகன் இயேசுவின் மகிமையிலே
வாழ் நாள் முழுவதும் வாழ்வதற்கே... - 2
ஆராதனை... ஆராதனை... - 2
என் அன்பர் இயேசுவிற்கே... - 2 (உம்மைநான்...)