உம்மை தஞ்சமாகக் கொண்டவர்கள்
பாக்கியவான்கள் பாக்கியவான்கள்
என்றென்றும் பாக்கியவான்கள்
அல்லேலூயா பாக்கியவான்கள் (4)
ஆவியில் எளிமை தாழ்மையுமாய்
ஜீவிப்பவர் என்றும் பாக்கியவான்கள்
சத்திய வேதத்தைக் கைக்கொண்டு
போதிப்பவர் என்றும் பாக்கியவான்கள்
தேவ வழிகளில் உத்தமமாய்
நடப்பவர் என்றும் பாக்கியவான்கள்
கிறிஸ்துவுக்குள்ளாய் மரிப்பவர்கள்
இதுமுதலாய் என்றும் பாக்கியவான்கள்