உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை

Artists :
Album:
Categories:


உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை -- Ummal Agatha Kariyam
 
உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை -2
எல்லாமே உம்மால் ஆகும் - அல்லேலூயா
எல்லாமே உம்மால் ஆகும்
ஆகும் எல்லாம் ஆகும்
 உம்மாலே தான் எல்லாம் ஆகும்
 
1. சொல்லி முடியாத அற்புதம்
செய்பவர் நீரே - ஐயா நீரே
எண்ணிமுடியாத அதிசயம்
செய்பவர் நீரே  - ஐயா நீரே
அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
அன்பே  உமக்கு ஸ்தோத்திரம்
 
2. எனக்கு குறித்ததை நிறைவேற்றி
முடிப்பவர் நீரே - ஐயா நீரே
எனக்காக யாவையும் செய்து
முடிப்பவர் நீரே - ஐயா நீரே
அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
அன்பே உமக்கு ஸ்தோத்திரம்
 
3. வறண்ட நிலத்தை நீரூற்றாய்
மாற்றுபவர் நீரே - ஐயா நீரே
அவாந்திர வெளியை தண்ணீராய்
மாற்றுபவர் நீரே - ஐயா நீரே
அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
அன்பே உமக்கு ஸ்தோத்திரம்