உம்மாலே தேவனே உம்மாலே
எனக்கு விடுதலை எனக்கு மீட்பு
உம்மாலே இயேசுவே உம்மாலே
எனக்கு சமாதானம் சந்தோஷமே
ஆமென் அல்லேலூயா
ஸ்தோத்திரம் மகிமை
உம்மில் மகிழ்ந்து களிகூறுவேன்
குருடனுக்கு உம்மாலே பார்வை
செவிடருக்கு திறந்த செவிகள்
முடவனை துள்ள பண்ணுவது
உமது அற்புதம் அல்லவோ
லாசருக்கு உம்மாலே ஜீவன்
தாசருக்கு ஆவியின் வரங்கள்
எனக்கோ நேசத்தின் உச்சிதம்
ருசித்து புசித்து மகிழுவேன்
சொப்பனம் தரிசனம் தாருமே
வேதத்தின் மூலமாய் பேசுமே
ஆனாலும் உம்முகமே கண்டிடவே
ஏங்குதே எந்தனின் உள்ளமே.