உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்

Artists : Fr. Berchmans
Album:
Categories:


உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்துவிடும்
  
கலங்காதே  மகனே கலங்காதே மகளே
என் இயேசு கைவிடமாட்டார்
 
1.   கடந்ததை நினைத்து கலங்காதே
      நடந்ததை மறந்துவிடு
      கர்த்தர் புதியன செய்திடுவார்
      இன்றே  நீ காண்பாய் ( 2  )  
 
      கலங்கிடவே வேண்டாம் -2
      நம்  இயேசு கைவிடமாட்டார்
 
2.   நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
      உடைந்த உள்ளம் தாங்குகிறார்
      காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
      கண்ணீர் துடைக்கின்றார் - உன்
 
3.   திராணிக்கு மேலாக  சோதிக்கப்பட
      ஒருநாளும் விடமாட்டார்
      தாங்கிடும் பெலன் தருவார்
      தப்பிச் செல்ல வழி செய்வார் - நீ
 
4.   நல்லதோர் போராட்டம் போராடுவோம்
      விசுவாசம் காத்துக் கொள்வோம்
      நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
      நேசர் வருகையில் தந்திடுவார் - நம்
 
      எங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
      எங்கள் கவலைகள் கண்ணீர்
      எல்லாம் மறைந்துவிடும்
 
      கலங்கிடவே  மாட்டோம்  - நாங்கள்
      கலங்கிடவே மாட்டடோம்
      எங்கள் இயேசு கைவிடமாட்டார்