உன்னையே வெறுத்துவிட்டால்

Artists : Fr. Berchmans
Album:
Categories:


உன்னையே வெறுத்துவிட்டால்

ஊழியம் செய்திடலாம்            - 2

 

சுயத்தை சாகடித்தால்

சுகமாய் வாழ்ந்திடலாம்          - 2       - உன்னை

 

சிலுவையை சுமப்பதனால்

சிந்தையே மாறிவிடும்             - 2

நீடிய பொறுமை வரும்

நிரந்தர அமைதி வரும்            - 2       - உன்னை

 

பெயர் புகழ் எல்லாமே

இயேசுவின் நாமத்திற்கே       - 2

கிறிஸ்து வளரட்டும்

நமது மறையட்டுமே                 - 2       - உன்னை

 

நாளைய தினம் குறித்து

கலங்காதே மகனே (மகளே)  - 2

இதுவரை காத்த தெய்வம்

இனியும் நடத்திடுவார்            - 2       - உன்னை

 

சேர்த்து வைக்காதே

திருடன் பறித்திடுவான்          - 2      

கொடுத்திடு  கர்த்தருக்கே

குறைவின்றி காத்திடுவார்    - 2       - உன்னை

 

தன்னலம் நோக்காமல்

பிறர் நலம் தேடிடுவோம்         - 2

இயேசுவில் இருந்த சிந்தை

என்றும் இருக்கட்டுமே              - 2       - உன்னை