அநாதி சிநேகத்தால் என்னை
நேசித்தீரையா - காருண்யத்தினால்
என்னை இழுத்துக் கொண்டீரே
உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது
உங்க தயவு பெரியது
1. அனாதையாக அலைந்த என்னை
தேடி வந்தீரே - அன்பு காட்டி
அரவணைத்து காத்துக் கொண்டீரே
2. நிலையில்லா உலகத்தில்
அலைந்தேனைய்யா - நிகரில்லாத
இயேசுவே அணைத்துக் கொண்டீரே
3. தாயின் கருவில் தோன்று முன்னே
தெரிந்து கொண்டீரே - தாயைப் போல
ஆற்றித் தேற்றி நடத்தி வந்தீரே
4. நடத்தி வந்த பாதைகளை நினைக்கும்
போதெல்லாம் - கண்ணீரோடு
நன்றி சொல்லி துதிக்கின்றேனைய்யா
5. கர்த்தர் செய்ய நினைத்தது
தடைபடவில்லை - சகலத்தையும்
நன்மையாக செய்து முடித்தீரே