நல்லவரே என் இயேசுவே நான் பாடும் பாடலின் காரணரே!!

Artists : john jebaraj
Album:
Categories:


நல்லவரே என் இயேசுவே
நான் பாடும் பாடலின் காரணரே!!

நன்மைகள் எதிர் பார்த்து உதவாதவர்
ஏழையாம் என்னை என்றும் மறவாதவர்
துதி உமக்கே கனம் உமக்கே
புகழும் மேன்மையும் ஒருவருக்கே

1. எத்தனை மனிதர்கள் பார்த்தேனையா
ஒருவரும் உம்மை போல் இல்லை ஐயா
நீரின்றி வாழ்வே இல்லை
உணர்ந்தெனய்யா…
உந்தனின் மாறா அன்பை மறவேன் ஐயா

2. என் மனம் ஆழம் என்னை நீர் அறிவீர்
என் மன விருப்பங்கள் பார்த்துக்கொள்வீர்
ஊழிய பாதையில் உடன் வருவீர்
சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர்
துதி உமக்கே புகழும் மேன்மையும் ஒருவருக்கே