வழுவாது காத்திட்ட நல்லவரே
வலக்கரம் பிடித்திட்ட நல்லவரே
நேசத்தை பொழிந்திடும் நேசரே
நடனத்துடன் ஆடிப்பாடி துதிப்பேன்
ஆ... ஆனந்த நடனத்துடன்
ஆடிப்பாடி என்றும் துதித்திடுவேன்
கால்கள் சறுக்கிட்ட வேளையிலே
உம் கிருபையல்லோ தாங்கியதே
யோர்தானின் வெள்ள நேரத்திலே
உம் புயம் அல்லோ நடத்தியதே - ஆ....
நிந்தை அவமான சூழ்நிலையில்
தேற்றியே காத்தீரே என் நேசரே
பாதாள இச்சைகள் மோதிடினும்
தோல்விக்கு இடமே கொடுக்கவில்லை - ஆ....
உலகத்தின் ஓட்டம் முடித்தபின்பு
ஒளிமய தேசத்தை சுதந்தரிப்பேன்
ஆயிரம் ஆயிரம் தூதருடன்
ஓய்வின்றி ஆடிப்பாடி துதிப்பேன்.