வானம் திறந்து வல்லமையாக
ஆவியானவரே வாரும் வாரும் (2)
தாகம் தீர்க்க வாரும்
அக்கினி ஊற்ற வாரும் - 2
வாரும் தேவா வாரும் (2) - வானம்
உயிர்ப்பிக்க மாட்டீரோ
உலர்ந்த எம்மையுமே
உள்ளான காயங்களை
ஆற்றியே தேற்றிடுமே - தாகம்
பரிசுத்த ஆவியினால்
பரிசுத்தம் ஈந்திடுமே (2)
கரைதிறை அற்றவனாய் உம்
சமுகத்தில் நின்றிடவே (2) - தாகம்
அக்கினி அபிஷேகத்தால்
அக்கினி ஜுவாலையாக்கும்
எரிந்து ஒளிவீசிட
எண்ணெயால் அபிஷேகியும் - தாகம்