வானமே வையமே
பூமியே நிறைவே
செவிகொடு - நீ இயேசுவுக்கே
மேய்ப்பருமானவரே மீட்பருமானவரே
கூப்பிடும் வேளையில் ஒத்தாசை அவரே
போராட்டம் மத்தியில் தேற்றுதலே
வல்லமையானவரே நல்லாயனும் அவரே
கல்லான உள்ளத்தை கனிவாக மாற்றியே
கனிதரச் செய்திடும் காருண்யரே
உன்னதமானவரே தன்னையே தந்தவரே
உத்தமத்தில் என்றும் சுத்தனாய் நிலைக்க
உன்னத பெலனை ஈந்தவரே.