வானப் பராபரனே

Artists :
Album:
Categories:


வானப் பராபரனே இப்போ வாரும் எம்                          

மத்தியிலே - வந்து நின் திருக்கரத்தால்                         

எம்மை ஆசீர்வதியுமையா - எல்லா மகிமை               

கனமும் துதியும் ஏற்றிட வாருமையா

 

பக்தரின் மறைவிடமே ஏழை மக்களின்                    

அதிபதியே - பாதமே கூடும் பாதகர் எமக்கு           

பரிசுத்தமீயுமையா - வாக்கு மாறா                              

தேவா வாரும் வல்லமையால் நிறைக்க

    

கிருபாசனபதியே நின் கிருபையில்                   

நிலைத்திடவே - கஷ்டமதிலும்                            

நஷ்டமதிலும் நின் கருணையில் நின்றிடவே                    

நின் சக்தியோடு பக்தியில் நாம் பூரணராகிடவே

    

தாய் என்னை மறந்தாலும் - ஐயா நீர்                      

மறவாதிருக்க ஆவியினால் எம் உள்ளமதினில்                  

அக்கினி பற்றிடவே- யேகோவாவே                       

எங்களின் ராஜா எழுந்து வாருமையா

 

நினைத்திரா தினமதிலே எம் கர்த்தரே                     

வருவீரே - ஆவி ஆத்மா சரீரம் முற்றும்                  

மகிமையில் சேர்ந்திடவே - மாசில்லா                

பரிசுத்தராக மண்மீது துலங்கிடவே

 

வாதை பிணி தீர எம் வாய்த்த மருந்தே நீர்                     

பாவ சாப ரோகமுற்றும் மாற்றிடும்                       

திருரத்தமே - கல்வாரியண்டை                            

பெற்றிட நாமும் விரைந்து ஏகிடவே

 

ஆகாய மேகமீதில் எக்காளம் தொனித்திடவே              

அன்பின் தயாளன் ஆனந்த பூமான் வரவே                 

இரண்டாம் முறையே - ஆசையோடு                      

காத்திருந்து ஜெபித்திட வல்லமையாய்