வானாதி வானம் கொளளா

Artists : Bro.Sam Jebadurai
Album: Praise Songs
Categories:


    வானாதி வானம் கொள்ளா

    கர்த்தாதி கர்த்தர் நீரே  ...

    தேவாதி தேவன் அல்லோ

    என் இதயத்தின் ராஜாவே

    அரசாளும் அரசாளும் அகிலமெல்லாம்

    அதிகாரமுள்ளவரே

 

1.  எழுந்து வாரும் (எம்) மத்தியிலே

    அள்ளித் தாரும் கிருபைகளை

    மன்னாதி மன்னர் நீரே

    பணிகின்றோம் பாதத்தில்

 

2.  ஆயிரம் ஆயிரம் பேர்களிலே

    அழகில் சிறந்தவர் நீர் மாத்ரமே

    உள்ளத்தின் நேசமெல்லாம்

    உமக்கே என்றென்றுமே

 

3.  சேனை சேனை தூதரோடு

    வாரும் வாரும் என் நேசரே

    மகிமையின் ராஜாவாக - நீர்

    வரும் நாளை எதிர்நோக்குவேன்