வானவர் வருகிறார் வான சேனையோடு
வரவேற்கும் நாள் வந்திட்டதே
காண்பேனே கண்குளிர கர்த்தரை
ஆத்தும நேசருடன் ஆளுகை செய்திடவே
ஆவல் கொண்டேன் தாகம் கொண்டேன்
நித்தியம் ஜீவித்து நிர்மலன் மார்பிலே
நீங்காது நிலைப்பேன் நீடூழியாய்
வாக்குகள் தந்தவரை வானமீதினிலே
எதிர்க்கொள்ள ஏக்கம் கொண்டேன்
விண்ணவர் செயலில் கண்ணிமை நேரத்தில்
விரைந்தே செல்லுவேன் அன்பரிடம்
சாரோனின் ரோஜாவாம் அன்பின் இயேசுவை
ஆசை தீர அணைத்துக் கொள்வேன்
தெவிட்டா தேன்மொழி மட்டில்லா மகிழ்ச்சி
திட்டிடும் இயேசுவில் என்றென்றுமே.