வெண்கல கதவுகள் உடையுதே
புதிய வாசல்கள் திறக்குதே
வெண்மேகம் புதுவழி காட்டுதே
இனியதே மனமகிழுதே
அல்லேலூயா பாடி ஆர்ப்பரிப்போம்
அல்லேலூயா பாடி அகமகிழ்வோம்
அந்தகார பொக்கிஷங்களும்
ஒளிப்பிடத்தின் புதையல்களும் - 2
அன்பர் இயேசு தருகிறார்
இன்பமாக பெறுவோம் - நாம் (2)
இருள்நீங்கி ஒளிவீசுதே...
கிறிஸ்துநாமம் உயர்ந்திடுதே
தடைகள் யாவும் தகர்ந்திடும்
கிறிஸ்து இயேசு நமக்குண்டே - (ஜெய)
சத்துருக்கள் முன்பாய் எனக்கு
பந்தி ஒன்றை ஆயத்தம் செய்தார்
எந்தன் பாத்திரம் நிரம்புதே
நிரம்பியே வழியுதே - இப்போ
ஜீவனுள்ள நாட்களிலெல்லாம்
அருள்மாரி பொழிந்திடுமே
நன்மை கிருபை தொடருமே...
என்னை என்றும் தொடருமே - (இனி)