விண் தூதர் ஆர்ப்பரிக்கவே
பண் பாடி மகிழ்ந்திடவே
வெண்ணாடை தரித்தேசுவோடு
ஆடிப்பாடி அகமகிழ்வேன்
துதிப்பேன் ஸ்தோத்திரிப்பேன் மகிழுவேன்
ராஜாதி ராஜாவுடனே
பளிங்கு நதியோரத்திலே
ஒளி வீசும் மகிமையோடு
தூதர் தொனியுடன் நானும் சேர்ந்து
ஆடிப்பாடி அகமகிழ்வேன் - துதிப்பேன்
ஜெயம் கொண்ட பரிசுத்தனாய்
ஜெயம் கொண்ட கிறிஸ்துவோடு
பிதாவின் சிங்காசனத்திலே
ஆடிப்பாடி அகமகிழ்வேன் - துதிப்பேன்
ஜீவவிருட்சம் அங்கு உண்டு
ஜீவ நதியில் தாகம் தீர்ப்பேன்
ஜீவ கிரீடத்தை நான் பெறும் நாளில்
ஆடிப்பாடி அகமகிழ்பேன் - துதிப்பேன்