இயேசு ராஜனின் திருவடிக்கு சரணம் சரணம் சரணம்

Artists :
Album:
Categories:


இயேசு ராஜனின் திருவடிக்கு/ Yesu Rajanin Thiruvadikku
 
இயேசு ராஜனின் திருவடிக்கு
சரணம் சரணம் சரணம்
ஆத்ம நாதனின் மலரடிக்கு
 சரணம் சரணம் சரணம்
 
1. பார் போற்றும் தூய தூய தேவனே
மெய் ராஜனே எங்கள் நாதனே
பயம் யாவும் நீக்கும் துணை ஆனீரே
 
2. இளைப்பாறுதல் தரும் வேந்தனே
இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதரே
ஏழை என்னை ஆற்றித் தேற்றிக் காப்பீரே
 
3. பெலவீனம் யாவும்  போக்கும் வல்லோரே
பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே
ஆவி ஆத்துமா சரீரத்தைப் படைக்கிறேன்
 
4. உந்தன் சித்தம் செய்ய அருள் தாருமே
எந்தன் சித்தம் யாவும் ஒழிப்பீரே
சொந்தமாக ஏற்று என்னை ஆட்கொள்ளும்
 
5. அல்லேலூயா பாடி வந்து துதிப்பேன்
மனதார உம்மை என்றும் போற்றுவேன்
அல்லேலூயா அல்லேலூயா ஆமென்